பொருளாதாரம்

தற்போதைய சமூக-பொருளாதார சிக்கல்கள்

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிதாக பணியில் சேர உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடியதாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு 2024-25 மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, முதல் முறையாக பணிக்கு சேருபவர்களை மையமாகக் கொண்டது.இரண்டாவது பகுதி, உரிமையாளர்களை மையமாகக் கொண்டது:

முதல் முறை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த முதல் முறை பணியாளர்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அரசு வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள்.

உரிமையாளர்களுக்கு ஆகரவு:. 

அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களைக் கொண்ட நிறுவன உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பணியாளருக்கும் மாதத்திற்கு ரூ.3000 வரை உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த ஊக்கத் தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேநேரத்தில், உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத் தொகை 3-வது மற்றும் 4-வது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.

இந்தியாவில் வரி அமைப்பு

ஜிஎஸ்டி அமலாக்க தினம்

2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு

நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு, சேவை வரி 5%, 12%, 18%, 28%, ஆகிய நான்கு விகிதங்களில் விதிக்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Current Affairs பொருளாதாரம் >