அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
உலக மகிழ்ச்சி அறிக்கை 2025
- இது குடிமக்களின் வாழ்க்கை திருப்தி மற்றும் மகிழ்ச்சி அளவுகளின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஆண்டு உலகளாவிய அறிக்கையாகும்.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெல்பீயிங் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டது.
- காலுப், ஐ.நா. நிலையான மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பு மற்றும் ஒரு சுயாதீன ஆசிரியர் குழுவுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
- உலக தரவரிசை – முதல் 3 நாடுகள்: பின்லாந்து (முதலிடம் – 1வது, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக), டென்மார்க் (2வது) மற்றும் ஐஸ்லாந்து (3வது).
- கடைசி 3 நாடுகள்: ஆப்கானிஸ்தான் (147வது), சியரா லியோன் மற்றும் லெபனான்.
- இந்தியாவின் தரவரிசை நிலை:
- இந்தியா 147 நாடுகளில் 118வது இடத்தில் உள்ளது.
- மதிப்பெண் 054 (2021-23) இலிருந்து 4.389 (2022-24) ஆக மேம்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் (109) மற்றும் நேபாளம் (92) ஆகியவற்றைவிட குறைவான தரவரிசையில் உள்ளது.
- ஆறு முக்கிய குறிகாட்டிகள்: தலா ஜிடிபி, ஆரோக்கியமான வாழ்நாள் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, சுதந்திரம், தாராள குணம், ஊழல் பற்றிய கருத்து.