அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
தரவுத் தொகுப்புகள், பதிவேடுகள் 2024
- மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அமைப்பு, நவீனமயமாக்கப்பட்டதின் புதிய தரவுதொகுப்புகள், பதிவேடு தொகுப்புகளை உருவாக்கியுள்ளது.
- விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர், கிராமப்புற மேமபாடு, சுற்றுலா, சமூக நீதி, வங்கி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் 40 அமைச்சகங்கள், துறைகளிலிருந்து பெறப்பட்ட விரிவான ஆதாரங்களான சுமார் 270 தரவுத் தொகுப்புகள், பதிவேடுகளின் ஒருங்கிணைப்பாகும
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பற்றி
- புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் 1999 ல் உருவானது.இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன:
- புள்ளியியல் பிரிவு: மத்திய புள்ளியியல் அலுவலகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு,தேசிய ஆய்வு அலுவலகம்
- திட்ட செயலாக்க பிரிவு: இருபது அம்ச திட்டம்,கட்டுமான மேற்பார்வை,எம்.பி உள்ளூர் வளர்ச்சி திட்டம்