பொருளாதாரம்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்
வழிபாட்டுத் தலங்கள்
1.வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் மற்றும் தர்காக்களில் ஆய்வு நடத்துவது தொடர்பான வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் எந்தவொரு உத்தரவையும் அடுத்த அறிவுறுத்தல் வெளியிடப்படும் வரை பிறப்பிக்கக்கூடாது என்றும் இதுதொடர்பாக புதிதாக வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
2.வழிபாட்டுத் தலங்கள் 1991 சட்டத்தை மேற்கோள்காட்டி, இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முஸ்லிம் காப்பு வாதிடுகிறது. ஏனெனில், நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நிலவிய வழிபாட்டுத் தலத்தின் மதத்தன்மையின் மாற்றத்தை வழிப்பாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது.

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
தலைமை நீதிபதிகளின் ஓய்வு
1.தலைமை நீதிபதிகள் தங்கள் பணிகளை புரிந்துகொள்ளத் தொடங்கும்போதே ஓய்வு பெறுவது நீதித்துறையின் செயல்திறனை பாதிக்கிறது.
2.ஆங்கிலேய ஆட்சியின் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் 85 ஆண்டுகளில் 11 தலைமை நீதிபதிகள் பணியாற்றினர், ஒரு தலைமை நீதிபதி சராசரியாக 8 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

3.சுதந்திரத்திற்குப் பின், 65 ஆண்டுகளில் 24 தலைமை நீதிபதிகள் பணியாற்றினர், சராசரியாக 2.75 ஆண்டுகள்.

Next Current Affairs பொருளாதாரம் >