பொருளாதாரம்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

புதிய அரசாங்கம்

  • தொடர்ந்து மூன்றாவது முறையாக புதிய அரசாங்கத்தை அமைக்க நரேந்திர மோடியை ஜனாதிபதி திரௌபதி முர்மு முறைப்படி அழைத்தார்.
  • அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA)  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 543 இடங்களில் 293 இடங்களில் வென்றுள்ளது.
  • பாஜக – 240 இடங்கள்
  • இந்திய தேசிய காங்கிரஸ் (INC) – 99 இடங்கள்
  • சமாஜ்வாதி கட்சி (SP) – 37 இடங்கள்
  • அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) – 29 இடங்கள்.
  • அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மையாக 272 இடங்கள் தேவை, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை
  • NDA கூட்டணியானது தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) N. சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வரும் ஜனதா தளம் (ஐக்கிய) தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோரைக் கொண்டுள்ளது.
  • இந்தூர் மக்களவைத் தொகுதியில் 218674 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
  • இந்த தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பெண்களின் எண்ணிக்கை 74 மட்டுமே மேலும் பெண்கள் மக்களவையில் வெறும் 13.63% மட்டுமே உள்ளனர். 
  • தலைமை தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியா 64.2 கோடி வாக்காளர்களுடன் உலக சாதனை படைத்துள்ளது, இதில் 31.2 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
  • இது அனைத்து G7 நாடுகளின் வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகமாகும்.
Next Current Affairs பொருளாதாரம் >

People also Read