பொருளாதாரம்

இந்தியாவின் சாலை விபத்துகள் அறிக்கை – 2022 வெளியீடு

  • இந்தியாவின் சாலை விபத்துகள் குறித்த வருடாந்திர அறிக்கையை (2022) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்திடம் (UNESCAP) பெறப்பட்ட தரவு/தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்தனர், 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர்.
  • தமிழ்நாடு 64,105 விபத்துகளுடன் (13.9%) அதிக சாலை விபத்துகளைப் பதிவுசெய்துள்ளது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (54,432 அதாவது 11.8%) உள்ளது.
  • உத்திரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர், அதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளது.
Next Current Affairs பொருளாதாரம் >