பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்

டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை

  • கைப்பேசியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் (யுபிஐ) சேவை மூலம் ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
  • கடந்த டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு மேலே குறிப்பிட்ட தொகைக்கு 782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
  • 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை குறித்து மத்திய நிதி சேவைகள் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டின்
  • எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. யுபிஐ சேவை மூலம் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.12.82 லட்சம் கோடி பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
  • கைப்பேசி மூலம் நடைபெறும் வங்கி பண பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இந்தச் சேவையை 381 வங்கிகள் வழங்கி வருவதால் மாதந்தோறும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
Next பொருளாதாரம் >