பொருளாதாரம்

குறியீடுகள்

இடைநிலைக் கல்வி இடைநிற்றல் 12.6%

  • தேசிய அளவில் இடைநிலைக் கல்வியில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 12.6% ஆக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குஜராத், பிகார், மேகாலயா உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு செயல்படுத்தி வரும் ”சமக்ர சிக்ஷா” திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. 
  • கூட்டத்தின் இறுதியில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தேசிய அளவில் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிலைக் கல்வி அளவில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் சராசரியாக 12.6 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பழங்குடியினர், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகவே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வீட்டில் உள்ள பணிகள் காரணமாக மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் தேசிய அளவில் 33 சதவீதமாக உள்ளதாக யுனிசெஃப் (UNICEF) கடந்த 2022 ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி இருந்து இடைநிற்கும் மாணவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Next பொருளாதாரம் >