புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

அஷ்டமுடி ஏரி

  • புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் அஷ்டமுடி ஏரியில் நுண்நெகிழி மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராம்சர் சதுப்பு நிலமாகும்.
  • இந்த ஆய்வில் உவர் நீர் ஏரியின் மீன், மட்டி மீன், படிவுகள் மற்றும் நீரில் நுண்நெகிழி இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பு

  • நுண்நெகிழிகள் என்பது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துண்டுகள் ஆகும்.
  • இந்தியாவில் தற்போது 80 ராம்சர் தளங்கள் உள்ளன.

இயற்கை பேரிடர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள்

ரெமல் புயல்

  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வங்காள விரிகுடாவில் ரெமல் புயல் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
  • ரெமல் புயலுக்கு ஓமன் நாடு பெயரிட்டுள்ளது.
Next Current Affairs புவியியல் >