புவியியல்

இதர நிகழ்வுகள்

லித்தியத்தை ஏலம் மற்றும் சுரங்கம் எடுக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டம்

  • EV பேட்டரிகளுக்கு முக்கிய உள்ளீடான லித்தியம் சுரங்கத்தை அதிகரிக்கும் வகையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் மற்றும் இதர கனிமங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடவும், சுரங்கப்படுத்தவும் அனுமதிக்கும் சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • இச்சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படுவதைத் தடுக்கின்ற அணுசக்தி கனிமங்களின் பட்டியலில் இருந்து லித்தியம் மற்றும் பிற கனிமங்கள் நீக்கப்பட்டன.
  • அணு சக்தி கனிமங்களின் பட்டியலில் இருந்து இவை நீக்கப்பட்டவுடன், இந்த கனிமங்களின் ஆய்வு மற்றும் சுரங்கம் தனியாருக்கு திறக்கப்படும்.
  • இதன் விளைவாக, இந்த கனிமங்களின் ஆய்வு சுரங்கம் நாட்டில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு

  • இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
  • இப்போது டைட்டானியம், பெரில், நியோபியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவை சுரங்கம் மற்றும் ஏலத்திற்காக திறக்கப்படும் இதர கனிமங்கள் ஆகும். 
  • இந்த கனிமங்கள் முன்பு அரசு நிறுவனங்கள் மட்டுமே வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டன.
Next புவியியல் >