தேசிய நிகழ்வுகள்

பாரத் டாக்ஸி

  • ஜனவரி 1 ஆம் தேதி முதல் டெல்லியில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்படவுள்ளது.
  • இது ஓலா, உபர் மற்றும் ரேபிடோவிற்கு மாற்றாக இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவையாகும்.
  • பாரத் டாக்ஸி என்பது இந்தியா முழுவதும் டாக்ஸி சேவைகளை வழங்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும்.
  • இது சஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.
  • முன்னணி நிறுவனங்கள் தேசிய மின்-ஆளுமை பிரிவு (NeGD) மற்றும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (MeitY) ஆகும்.

கேரளாவின் மாதிரி E-Truck வழித்தட முயற்சி முன்மொழியப்பட்ட E-Truck வழித்தடம்:

  • NH-66 வழியாக மாதிரி E-Truck வழித்தடத்தை கேரளம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • சரக்கு போக்குவரத்தில் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் மாநிலத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • மத்திய அரசின் PM E-DRIVE (Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) திட்டத்துடன் இணங்க செயல்படுகிறது.

PM E-DRIVE திட்டம்:

  • PM E-DRIVE என்பது Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement – இன் விரிவாக்கமாகும்.
  • நாட்டில் மின்சார வாகனங்கள் (EV) பயன்பாட்டை விரைவுபடுத்துதல், சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் வலுவான EV உற்பத்தி சூழலை அமைத்தல் இதன் நோக்கமாகும்.
  • இலக்கு பயனாளிகள்
  • மேம்பட்ட பேட்டரிகளுடன் கூடிய வர்த்தக மற்றும் தனியார் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள். 
  •  ஸ்க்ராப்பிங் சான்றிதழ் கொண்ட மின்சார ஆம்புலன்ஸ்கள் மற்றும் e-trucks.
  • பொது போக்குவரத்திற்கான மின்சார பேருந்துகள்.

சபாசார் (SabhaSaar) – கிராம சபா கூட்டங்களுக்கான AI கருவி

  • சூழல்: அடிப்படை ஆட்சி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்த, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘சபாசார்’ என்ற AI அடிப்படையிலான குரல்–எழுத்து மாற்றம் மற்றும் கூட்டச் சுருக்க கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    சபாசார் AI-இயக்கப்பட்ட கிளவுட் உள்கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) India AI Mission கீழ் செயல்படும் போர்டலாகும்.
  • India AI Mission கீழ்க்கண்டவற்றின் ஆளுமைக்கான (governance) நொடல் அமைப்பாக செயல்படுகிறது:
  • AI கட்டமைப்பு
  • சபாசார் மூலம் உருவாகும் தரவுகள்
Next Current Affairs தேசிய - நிகழ்வுகளின் நாட்குறிப்பு >