தேசிய திட்டங்கள்

REPM உற்பத்தித் திட்டம்

  • பின்னணி: ‘சின்டர்டு ரேர் எர்த் பெர்மனன்ட் மேக்னட்‘  உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை கனரகத் தொழில்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

REPM உற்பத்தித் திட்டம் பற்றி 

  • இலக்கு: ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (MTPA) உற்பத்தித் திறன் கொண்ட REPM உற்பத்தி வசதியை நிறுவுதல்.
  • முழுமையான உற்பத்தி செயல்முறைக்கு ஆதரவளிக்கிறது:
    • அரிய மண் ஆக்சைடுகள் –  உலோகங்கள்
    • உலோகங்கள் – உலோகக் கலவைகள் 
    • உலோகக் கலவைகள் – முழுமையாக்கப்பட்ட REPM-கள்
  • இத்திட்டத்தின் மூலம் இந்தியா தனது முதல் ஒருங்கிணைந்த REPM உற்பத்தி வசதிகளை நிறுவவுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • மொத்த நிதி ஒதுக்கீடு: 7,280 கோடி
  • உற்பத்தித் திறன்: 6,000 MTPA
  • பயனாளிகள்: 5 நிறுவனங்கள் (ஒவ்வொன்றும் 1,200 MTPA வரை)
  • தேர்வு முறை: உலகளாவிய போட்டி ஒப்பந்தப்புள்ளி 
  • கால அளவு: 7 ஆண்டுகள்

அரிய மண் காந்தங்கள் பற்றி 

  • இவை அரிய மண் தனிமங்களின் உலோகக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஒரு வகை நிரந்தர காந்தங்கள் ஆகும்.
  • பண்புகள்: மற்ற வகை காந்தங்களுடன் ஒப்பிடும்போது, ​​இவை மிகச்சிறந்த காந்த வலிமை, அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

வகைகள்

  • நியோடைமியம் (Nd-Fe-B): நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் ஆகியவற்றால் ஆனது
  • சமாரியம் கோபால்ட் (SmCo): சமாரியம் மற்றும் கோபால்ட் ஆகியவற்றால் ஆனது
  • இவை இரண்டும் வலிமையான நிரந்தர காந்தங்களில் அடங்கும்.

பயன்பாடுகள்

  • மின்சார வாகனங்கள் (EVs)
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (காற்றாலைகள்)
  • மின்னணு சாதனங்கள்
  • விண்வெளித் துறை
  • பாதுகாப்பு உபகரணங்கள்
Next தேசிய திட்டங்கள் >