தினசரி தேசிய நிகழ்வு

29வது தவணை தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்கியது

  • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் 29வது தவணை தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்கியது.

தேர்தல் பத்திரத்  திட்டம் பற்றி

  • அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பண நன்கொடைக்கு மாற்றாக 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியாகும் .
  • இது பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.
  • இந்த பத்திரமானது வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
  • பத்திரமானது ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மதிப்புகளில் விற்பனை செய்யப்படுகிறது.
  • இந்த பத்திரமானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் பத்து நாட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சமீபத்தில் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறும் போது கூடுதலாக பதினைந்து நாட்கள் விற்பனை செய்ய இந்த விதிமுறை திருத்தப்பட்டது.
Next தினசரி தேசிய நிகழ்வு >