தினசரி தேசிய நிகழ்வு

மாணவர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி

  • செயற்கை நுண்ணறிவு போன்ற திறன்களை தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கற்றுதரும் நோக்கத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) இந்தியாவுடன் கூட்டிணைந்துள்ளது.
  • தொழில்பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் (என்.எஸ்.டி.ஐ. பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு குறிப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), இயந்திர கற்றல் (எம்.எல்.) ஆகிய பயிற்சி அளிக்க திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 
  • இந்தக் கூட்டிணைப்பின் ஒரு பகுதியாக ஏ.டபிள்யூ.எஸ். இந்தியா சார்பில் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம், பாடநெறி உள்ளடக்கம், எண்ம உள்ளடக்கம், வினா வங்கிகள் மற்றும் கைவினைஞர்கள் பயிற்சி திட்டம் மற்றும் கைவினை பயிற்றுநர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட படிப்புகளின் சுற்றல் விடியோக்கள் ‘பாரத் ஸ்கில்ஸ்’ வளைதளத்தில் (https://bharatskils.gov.in/) இலவசமாகக் கிடைக்கும்.
Next தினசரி தேசிய நிகழ்வு >