தினசரி தேசிய நிகழ்வுகள்

மாநில பொருளாதார தகவல் வலைப்பக்கம்

  • கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள நீதி-என்சிஏ இஆர் மாநில பொருளாதார தகவல் மைய வலைப்பக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) அறிமுகம் செய்யவுள்ளார்.
  • நீதி ஆயோக் அமைப்பு, தேசிய பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (என்சிஏஇஆர்) இணைந்து உருவாக்கியுள்ள இந்த வலைபக்கம். கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு வரையிலான 28 இந்திய மாநிலங்களின் தரவுகளை மக்கள்தொகை, பொருளாதார அமைப்பு, நிதி, சுகாதாரம், கல்வி ஆகிய ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தி வழங்கும்.
  • பேரியல் (மேக்ரோ) பொருளாதாரம், நிதி, மக்கள்தொகை, சமூக-பொருளாதார போக்குகளின் புரிதலை எளிதாக்கும் இந்த வலைபக்கம், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆய்வுகளுக்கான புள்ளி விவரங்களை வழங்கும் விரிவான ஆராய்ச்சி மையமாகவும் செயல் படும்.
  • ஒருங்கிணைந்த துறைசார் தரவுகளுக்கான தற்போதைய தேவையை ஒரே இடத்தில் நிவர்த்தி செய்யும்.
  • மேலும், இந்த வலைபக்கத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தரவையும் மற்ற மாநிலங்கள் மற்றும் தேசிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்றும் நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க “ஜுவின்” வலைதளம்

  • (ரேபிஸ் மற்றும் பாம்புக்கடிக் கான தடுப்பூசிகளின் நாடு தழு விய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது.
  • சுரோனா தடுப்பூசி திட்டத் துக்காக அறிமுகம் செய்யப்பட்ட கோ-வின்’, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்துக்காக அறிமுகம் செய் யப்பட்ட யு-வின் வலைதளங்க னைப் போன்று ஜூவின் வலைத ளம் செயல்படும்.
  • அதாவது, மருத்துவச் சேவை நிறுவனங்கள், நகராட்சி அதிகாரி கள் மற்றும் கால்நடை மருத்துவச் சேவை நிறுவனங்களுடன் கூட்டமைப்பை விரிவுபடுத்தி, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்புக்கடி எதிர்ப்பு தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவலை இந்த வலைத் எம் அளிக்கும்.
  • வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் பாதிப்புக்கு உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 60,000 பேர் உயிரிழப்பதும், இந்தியாவில் இந்த உயிரிழப்பு 36 சதவீதமாக இருப்பதும் ஐக்கிய நாடுகள் மேம் பாட்டுத் திட்ட (யுஎன்டிபி புள் விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
  • இத்தகைய சூழலில், நாடு முழுவதும் ரேபிஸ் (ஏ.ஆர்லி, ஏஎஸ்வி) மற்றும் பாம்புக்கடிக்கான ஏஎஸ்வி) குடுப்பூசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ஜூவின் வலைத்தளத்தை யுஎன்டிபி-யின் தொழில்நுட்ப ஆதரவுடன் தேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (என்சிடிசி) மேம்படுத்தியுள்ளது.
  • இந்த வலைதளம், முன்னோடித் திட்டமாக தில்லி, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன் செயல்பாட்டுத்திறன் மற்றும் பலன் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் வலைதளம் அறிமுகம் செய்யப்படும்.
  • முன்னதாக, ரேபிஸ் மற்றும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடி சிகிச்சை பெறவும். அதுதொடர்பான தகவல்களைப் பெற வசதியாகவும் யுஎன் டி.பி-யுடன் இணைந்து 15400 என்ற உதவி எண்ணை என்சிடிசிகடந்த ஆண்டு இந்த 5 மாநிலங்களிலும் அறிமுகம் செய்தது.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >