தினசரி தேசிய நிகழ்வுகள்

எண்ம  பயிர் கணக்கெடுப்பு (DCS) அமைப்பு

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கைப்பேசி செயலி மூலம் நேரடியாக களத்திலிருந்து நிகழ்நேர பயிர் விதைக்கப்பட்ட விவரங்களைச் சேகரிக்க எண்ம  பயிர் கணக்கெடுப்பு (DCS) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

எண்ம பயிர் கணக்கெடுப்பு (DCS) அமைப்பின் அம்சங்கள்

  • நிகழ்நேர தரவு சேகரிப்பு: கைப்பேசி செயலி  மூலம் களங்களிலிருந்து பயிர் விவரங்களைப் பெறுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட துல்லியம்: வேளாண் பகுப்பாய்விற்கான துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உறுதி செய்கிறது.
  • வேளாண் இருப்பு ஒருங்கிணைப்பு: டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 மற்றும் இந்தியாவில் உள்ள பிற தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்டது.

உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடு

  • தேயிலை வாரியத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2024 இல் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. இது இலங்கையை முந்தி, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கென்யாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.

 

 

Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >