தினசரி தேசிய நிகழ்வுகள்
ஊழல் தரவரிசை பட்டியல் வெளியிடு
- 2024 ஆண்டின் ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா 38 புள்ளிகளுடன் 96-ஆவது இடத்தில் உள்ளது.
- கடந்த ஆண்டு, 39 புள்ளிகளுடன் 93-ஆவது இடத்தில் இருந்தது, 2022-ஆம் ஆண்டில் 40 புள்ளிகளுடன் 85-ஆவது இடத்தில் இருந்தது.
- பட்டியலில் 100 புள்ளிகள் பெற்ற நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 7 புள்ளிகள் உள்ள நாடுகள் ஊழல் மிகுந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
- அண்டை நாடுகள்: பாகிஸ்தான் 27 புள்ளிகளுடன் 135-ஆவது இடம், இலங்கை 32 புள்ளிகளுடன் 121-ஆவது இடம்,வங்கதேசம் 23 புள்ளிகளுடன் 151-ஆவது இடம், சீனா 43 புள்ளிகளுடன் 76-ஆவது இடம்
- முன்னணி நாடுகள்:டென்மார்க் 90 புள்ளிகளுடன் முதலிடம், பின்லாந்து 88 புள்ளிகளுடன் 2- ஆவது இடம்,சிங்கப்பூர் 84 புள்ளிகளுடன் 3-ஆவது இடம்
- கடைசி இடம்: தெற்கு சூடான், மேலும் சோமாலியா, வெனிசூலா, ஏமன் போன்ற நாடுகள் ஊழல் மிகுந்த நாடுகளாக உள்ளன.