தினசரி தேசிய நிகழ்வுகள்

தெலுங்கானா மாநில பாடல்

  • தெலுங்கானா அரசு சமீபத்தில் ஜெய ஜெய ஹே பாடலை தெலுங்கானா மாநில பாடலாக அறிவித்துள்ளது.
  • இரண்டரை நிமிடங்களுக்கு மேல் நீளும் பாடலின் குறுகிய பதிப்பும், 13.3 நிமிடங்களுக்கு மேல் நீளும் பாடலின் முழுப் பதிப்பும் மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பாடலை எழுதியவர் ஆண்டேஸ்ரீ ஆவார்.
  • இப்பாடலை ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

குறிப்பு

  • தமிழ் தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாகும்.
  • இதை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார்.
  • முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) 55 வினாடிகளில் பாடலைப் பாட வேண்டும்.
  • இதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >