தமிழ்நாட்டு நிகழ்வுகள்

பொன் விழா ஆண்டு பெண் போலீஸார் 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணம்

  • தமிழக காவல் துறையில் மகளிர் காவலரின் பொன் விழா ஆண்டையொட்டி, 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணத்தை சென்னையில் மாநில இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகளாவதையொட்டி, பொன் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இதன் ஒரு பகுதியாக 25 பெண் காவல் துறை பெண் அதிகாரிகள், பாய்மர படகு மூலம் சென்னையிலிருந்து கோடியக்கரை வரை 1,000 கி.மீ. சென்று, மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.
  • இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.

பின்னணி

  • 1973-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு எஸ்ஐ (உஷாராணி), ஒரு தலைமை காவலர் மற்றும் 20 காவலர்கள் அடங்கிய முதல் பெண்கள் தொகுதி அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் நியமிக்கப்பட்டது.
  • 1976-ம் ஆண்டில், லத்திகா சரண் மற்றும் ஜி திலகவதி ஆகியோர் தமிழக கேடரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர்.
  • 1992-ம் ஆண்டில், மாநிலத்தில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.

குறிப்பு

  • கிரண் பேடி 1972-ல் இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி பதவியில் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார்.
  • இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >