தமிழ்நாடு

தமிழகத்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் “ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை வெளியிட்டார்.
  • தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை நடத்தியது. 
  • இக்கணக்கெடுப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரையின் படி, யானைகளின் எண்ணிக்கையினை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கிடுவதையும், தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
  • “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023”யின் மூலம் தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
  • 2017-ல் 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. 
  • தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2477 யானைகளை கொண்டுள்ளது.
  • கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன. 
  • கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையை விட மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

குறிப்பு

  • யானைகள் திட்டம் தொடங்கப்பட்டது – 1992.

கீழடி அகழாய்வில் படிகத்தாலான எடைக் கல் கண்டெடுப்பு

  • சிவகங்கை மாவட்டம், கீழடி தொல்பொருள் அகழாய்வுத் தளத்தில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இங்கு படிகத்தால் தயாரிக்கப்பட்ட 2 செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. உயரம், 8 கிராம் எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது. 
  • இந்தக் கல்லின் மேல் பகுதி கோள வடிவில், அடிப்பகுதி தட்டையாக்கப்பட்டு பளபளப்பாக ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது.
  • மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச் சில்லுகள், இரும்பு ஆணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

வன உயிரின குற்றங்களைத் தடுக்க தனி கட்டுப்பாட்டு பிரிவு

  • வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
  • அதற்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். 

குறிப்பு

  • வன உயிர் (பாதுகாப்புச்) சட்டம், 1972
Next தமிழ்நாடு >