தமிழ்நாடு

கின்னஸ் சாதனை படைத்த பன்னாட்டு மாரத்தான்

  • சென்னையில் நடைபெற்ற “கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான்-2023“  போட்டியில் உலகிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் 73,206 ஒரே நேரத்தில் பங்கேற்றனர்.
  • இதையடுத்து இப்போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல்

  • தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

பாரதியார் மண்டபமாக மாறிய ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கம்

  • சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கு மகாகவி பாரதியார் மண்டபமாக பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பெயர் மாற்ற கல்வெட்டை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
  • ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த அரங்கத்தில்தான் ஆளநரின் அரசு விழாக்கள், முதல்வர் பதவியேற்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாக்கள் உள்ளிட்டவை நடைபெறும்.

சுப்ரமணிய பாரதியார் பற்றி

  • அவர் ஒரு கவிஞர், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி.
  • இவர் மகாகவி பாரதியார் என்று அழைக்கப்பட்டார்.
  • திருநெல்வேலி எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்தார்.
  • பெற்றோர் – சின்னசாமி மற்றும் லட்சுமி அம்மாள். 
Next தமிழ்நாடு >