தமிழ்நாடு

சிறைகளிலும் முதல் முறை குற்றவாளிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்

  • மத்திய சிறைகளில் 20 முதல் 25 வயது வரையிலான முதல் முறை குற்றவாளிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களில் 1,272 வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை பெற்ற பலர் முதல் முறை குற்றவாளிகளாவர்.
  • இவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கவும், சமுதாயத்தில் இவர்களுக்கான நிலையை உயர்த்தவும் மறுவாழ்வு அளிக்க வேண்டும். 
  • சென்னையில் தமிழ்நாடு சிறைத் துறை சார்பில், பரவை திட்டம் மூலம் 20 வயது முதல் 25 வயதிலான முதல் முறை குற்றவாளிகளுக்கு ஆளுமை மனப்பான்மை சீர்திருத்த உதவியும், சைதாப்பேட்டை துணை சிறையில் பட்டம் திட்டம் மூலம் மேலாண்மை, ஆளுமை, அணுகுமுறை மாற்றம் குறித்து அவர்களுக்கு மறு வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Next தமிழ்நாடு >