தமிழ்நாடு

6 மாவட்டங்களில் 28 வட்டங்கள் வறட்சி

  • தமிழகத்தில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 28 வட்டங்கள் வேளாண் வறட்சி வட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையானது, அக்டோபர் இறுதியில் தொடங்கியது.  டிசம்பர்  வரையிலான காலத்தில் மழைப் பொழிவின் அளவு 444.80 மில்லி மீட்டராக இருந்தது. ஆனாலும், ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில வட்டங்களில் குறைவான மழைப் பொழிவே இருந்தது.
  • இதையடுத்து, மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களை மாவட்ட அளவிலான வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தன.
  • இதில் மாவட்ட வாரியான சாகுபடி பரப்பு, தண்ணீர் மாறுபாடு குறியீடு, ஈரப்பத அளவு குளியீடு போன்ற விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.

24 மணி நேர குடிநீர் விநியோகம்

  • சென்னை கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் புதிய திட்டத்துக்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஒடிஸா மாநில நீர் கழகம் (WATCO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
Next தமிழ்நாடு >