தமிழ்நாடு

வெம்பக்கோட்டை : அகழாய்வில் சுடுமண் தோசைக்கல் 

  • விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட கருப்புநிற தோசைக்கல் கண்டெடுக்கப்பட்டது.
  • ஏற்கெனவே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்ட்ட நீர் அருந்தும் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.
  • இந்தப் பகுதியை முன்னோர்களின் வாழ்விடச் சான்றாகக் கருதுவாதாகத் தொல்லியல் துறையினர் தெவிவித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

  • மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா ஜுலை 15ல் நடைபெற்றது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை-புதுநத்தம் சாலையில் ரூ.134 கோடியில் 2,13,334 சதுர அடி பரப்பளவில் 7 தளங்களைக் கொண்ட நூலகம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
  • அனைத்துத் தனங்களும் குளிர்சாதன வசதி கொண்டதாகவும், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான அடிப்படைத் தேவைகளுடன் அமைக்கப்பட்ட இந்த நூலகம் சுமார் 3.3 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களின் மொத்த தொகுப்பாக அமைந்துள்ளது.
  • இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

Next தமிழ்நாடு >