தமிழ்நாடு

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்

  • புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில், தங்கத் தோடு, கார்லீனியன் கற்களால் உருவாக்கப்பட்ட சூதுபவள மணி, நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட எலுப்பு முனைக் கருவி ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எலும்பு முனைக் கருவி நூல் நூற்பதற்காக நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை அறியலாம்.
  • ஆறு இதழ் கொண்ட, 0.26 கராம் எடையுடைய தங்க மூக்குத்தி அல்லது தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
  • பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் வாழ்விடப் பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கீழடி 9-ஆம் கட்ட அகழாய்

  • கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடுமண் விலங்கின உருவங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட 183 தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்காளிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முறைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என மொத்தம் 183 தொல் பொருள்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டன. மேலும், வெவ்வேறு நிலையிலிருந்த எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டன.
  • முதல் கட்டமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட அகழாய்வுக் குழிகளில் களிமண், சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு அமைக்கப்பட்ட தரைத் தளம் கண்டறியப்பட்டது.
  • இந்த அகழாய்வுக் குழிகளில் தரைத் தளத்தின் கீழே சுமார் 2 அடி ஆழத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு, சிவப்பு பூச்சு, சிவப்பு நிற பானை ஓடுகள் குவியலாகக் கண்டறியப்பட்டன.
  • மேலும், துளையிடப்பட்ட பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள், ரசம் பூசப்பட்ட பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பானை ஒடுகள் கண்டறியப்பட்டன.
  • இந்தப் பானை ஓடுகளை  ஆய்வு செய்ததில் மீன், ஏணி, வடிவியல் சார்ந்த குறியீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளம் காணப்பட்டன.
  • கொந்தகை: கீழடி அருகேயுள்ள கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் இதுவரை 17 முதுமுக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டன.
Next தமிழ்நாடு >