தமிழ்நாடு

  • பேங்க் ஆப் பரோடா, மாநில அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் பயனாளிகளுக்கு டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அட்டை ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை தனிநபர் விபத்துக் காப்பீட்டை வழங்குகிறது மேலும் முதல் ஆண்டுக்கான சேர்க்கை மற்றும் வருடாந்திர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் .

திட்டம் பற்றி:

  • தொடக்கம்  :செப்டம்பர் 15,2022 .
  •  நோக்கம்:  அரசுப் பள்ளிகளிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது.
  • இத்திட்டத்தின் மூலம்  பட்டப் படிப்பு முடியும் வரை ஒரு பெண்ணுக்கு மாதம் 

ரூ. 1,000 வழங்கப்படும்.

மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு

  • மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு  தமிழ்நாட்டில் 1973 ம் ஆண்டு முதன் முறையாக   பெண் காவலர்கள் காவல் பணியில் சேர்க்கப்பட்டனர் இதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநிலத்தில் பெண் காவலர்களின் நலனுக்காக 9 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • இந்த திட்டங்களில் காவல் வருகை அணிவகுப்பு  நேரம்  மாற்றம் , காவல் நிலையங்களில் பெண் பணியாளர்களுக்கு தனி  கழிப்பறைகள் அமைத்தல், அவர்களின் குழந்தைகளை பராமரிக்க குழந்தை காப்பக வசதிகள், சென்னை மற்றும் மதுரையில் உள்ள பிரத்யேக மகளிர் விடுதிகள்  மற்றும்  காவல்துறையின் கலைஞர் செயல்திறன் ஆண்டு விருது உள்ளிட்ட 9 அறிவிப்புகள் .

“அவள் திட்டம்”:

  • 8.5 கோடியில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கும் அவள் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ்  குறைந்தது 50,000 பெண்களுக்கு தற்காப்பு  பயிற்சி அளிக்கப்படவுள்ளது 
Next தமிழ்நாடு >