தமிழ்நாடு

புதிய இந்திய எழுத்தறிவு திட்டம் (NILP)

  • புதிய பாரத் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 5.28 லட்சம் பேருக்கு கல்வி.
  • தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 5,28,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு 28,848 தன்னார்வலர்கள் கற்பிக்கின்றனர்.
  • பள்ளிக் கல்வித் துறையின் முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனரகம், புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டத்தின் மூலம், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, எண்ணியல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கி வருகிறது.
  • NILP 2022 பற்றி:
  • தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைவதற்கு வயது வந்தோருக்கான கல்வியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது
  • “வயது வந்தோர் கல்வி” என்ற சொல் “அனைவருக்கும் கல்வி” என்று மாற்றப்படும்.
  • குறிக்கோள்:
  • அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் அறிவை மட்டுமல்லாமல், 21 ஆம் நூற்றாண்டின் குடிமகனுக்குத் தேவையான பிற கூறுகளையும் வழங்குதல்.
  • ஆன்லைன் முறையில் தன்னார்வத் தொண்டு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
Next தமிழ்நாடு >