தமிழ்நாடு

மாணவர்களுக்கான சிறார் திரைப்படத் திருவிழா

அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறார் திரைப்படத் திருவிழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில்  தொடங்கியது.
  • இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
  • தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.  அந்த படங்கள் தொடர்பாக விமர்சனக் கட்டுரை எழுதுதல், ஒரு காட்சியை நாடகமாக நடித்தல், சுவரொட்டி வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன.
  • இந்த விழாவில் மாணவர்களுக்கு படங்கள் திரையிடுதல், குறும்படப் பயிற்சி, பிரபல இயக்குநர்களுடன் கலந்துரையாடல், கதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பார்.  அதில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை

மசோதாவை  திருப்பி அனுப்பினார் ஆளுநர்

  • ’ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினர்.
  • ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வருவதால், அவற்றைத் தடை செய்து சட்டம் இயற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுசெய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது.
Next தமிழ்நாடு >