தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

பிரதமர் சூர்ய கர் மானியத் திட்டம்

  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO)  பிரதமர் சூர்ய கர் மானியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 25 லட்சம் வீடுகளுக்கு  சூரிய மேற்கூரை மின்நிலையங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தற்போதைய திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 கிலோவாட் (KW) வரை நிறுவுவதற்கு அதிகபட்சம் 78,000 மானியம் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

பிரதமர் சூர்ய கர் மானியத் திட்டம் பற்றி

  • தொடக்கம் – பிப்ரவரி 13, 2024.
  • நோக்கம் – மேற்கூரை சூரிய மின்நிலையங்களை நிறுவுதல் மற்றும் ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குதல்.

தகைசால் தமிழர் விருது

  • ‘2024 தகைசால் தமிழர்’ விருதுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் இந்த விருதை வழங்குவார். இதில் 10 லட்சம் ரொக்கப்பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.

தகைசால் தமிழர் விருது பற்றி

  • இவ்விருது  2021-ல் நிறுவப்பட்டது.
  • நோக்கம் – தமிழ்நாட்டின் நலனுக்கும் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த ஆளுமையை கௌரவித்தல்.

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >