தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

  • அதிகமான பெண் குடும்பத் தலைவர்களை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
  • இதுவரை சுமார் 1.15 கோடி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி

  • தொடக்கம்  – செப்டம்பர் 15, 2023 காஞ்சிபுரம்
  • குறிக்கோள் – தகுதியுள்ள பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதத்திற்கு ரூ 1,000 அடிப்படை குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்தல்.
  • பயனாளிகள்  – 21 வயது நிறைவடைந்த பெண்கள் (செப்டம்பர் 15, 2002க்கு முன் பிறந்தவர்)

தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011

  • இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (RG & CCI) தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011ஐ சமீபத்தில் வெளியிட்டார்.
  • இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் (RG & CCI) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இந்த அட்லஸ் தமிழ்நாட்டிற்கான 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவை அதன் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தியுள்ளது.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7,21,47,030 ஆகும்.
  • தமிழ்நாட்டின் மொழி அட்லஸ், 2011, மாநில வாரியான இரண்டாவது மொழி அட்லஸ் ஆகும்.

முக்கிய கண்டுபிடிப்புகள்

  • தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18.49% பேர் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்.
  • மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.11% பேர் இந்தி பேசக்கூடியவர்கள்.
  • மாநிலத்தில் உள்ள மொத்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய மொழிகள் – தமிழ் (6,37,53,997), தெலுங்கு (42,34,302),
  • கன்னடம் (12,86,175), உருது (12, 64,537), மற்றும் மலையாளம் (7,26,096).

குறிப்பு

  • இந்தியாவின் மொழி அட்லஸின் முதல் பதிப்பு 2004 இல் 1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டது.
  • அக்டோபர் 2023 இல் முதல் மாநில வாரியான மொழி அட்லஸ் வெளியிட்ட மாநில மேற்குவங்கமாகும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்நிகழ்வு முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் பிறந்தநாளில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 2,23,536 மாணவர்கள் பயனடைவார்கள்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பற்றி

  • தொடக்கம் – செப்டம்பர் 15, 2022
  • குறிக்கோள் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >