தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

தமிழ்நாடு மாநில அரசு விழாக்கள்

  • பின்வரும் நபர்களின் பிறந்த நாட்கள்  அரசு விழாக்களாக கொண்டாடப்படும் தமிழக அரசு என்று அறிவித்தது.
  • எம்.கே. தியாகராஜ பாகவதர் (மார்ச் 1)
  • கே.எம். அன்னாள் தங்கோ (ஏப்ரல் 13)
  • தமிழறிஞர் முனைவர் மு. வரதராசனார் (ஏப்ரல் 25)
  • அஞ்சலை அம்மாள் (ஜூன் 1)
  • ஏ.டி. பன்னீர்செல்வம் (ஜூன் 1)
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (ஜூலை 7)
  • திவான் பகதூர் திராவிடமணி ரெட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7)
  • மெட்ராஸ் மாகாண  முதல்வர் பா. சுப்பராயன் (செப்டம்பர் 11)
  • எழுத்தாளர் கி. ராஜநாராயணன் (செப்டம்பர் 19)
  • இம்மானுவேல் சேகரன் (அக்டோபர் 9)
  • ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (அக்டோபர் 15)
  • அல்லாள இளைய நாயக்கர் (தை 1)

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
  • விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் நிலமற்ற SC/ST பெண்களுக்கு நிலம் வாங்குவதற்கு 20 கோடி ஒதுக்கப்படும்.
  • திருச்சி, மதுரை மற்றும் கோவையில் அமுத சுரபி திட்டத்தின் கீழ் 9 கோடி செலவில் மையப்படுத்தப்பட்ட சமையலறை அமைக்கப்படும்.
  • மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.
  • SC/ST சமூகத்தின் கலாச்சாரம், மரபுகள், இலக்கியப் படைப்புகள், மொழி அடிப்படையிலான தேசபக்தி ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக  ‘வாழ்வியல் விழா ஏற்பாடு செய்யப்படும்.
  • உயர்கல்வியில் சிறந்து விளங்கும் SC/ST மாணவர்களுக்கு 41 லட்சம் செலவில் திறன் வவுச்சர் வழங்கப்படும்.

தமிழ்நாடு ஏரி தரக் கண்காணிப்புத் திட்டம்

  • சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சமீபத்தில் தமிழ்நாடு ஏரி தரக் கண்காணிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இது நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு மூலம் நீர்நிலைகளில் செயல்படுத்தப்படும்.
  • முதற்கட்டமாக பூண்டி, செம்பரம்பாக்கம், உதகமண்டலம், கொடைக்கானல் ஏரிகளில் 5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >