தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

மரகத பூஞ்சோலை முன்முயற்சி

  • தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 100 கிராமங்களில் ‘மரகத பூஞ்சோலையை’ அமைக்கத் தொடங்கியுள்ளது.
  • சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஐந்து கிராமங்களில் ‘மரகத பூஞ்சோலையை’ உருவாக்கியுள்ளது.
  • குறிக்கோள் – பசுமைப் பரப்பை அதிகரிப்பது மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் இயற்கை வளங்களின் மூலம் உள்ளூர்வாசிகளின் கிராமப்புற வாழ்வாதாரத்தை ஆதரித்தல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை

  • திருப்பூரில் நடைபெற்ற ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் நிகழ்ச்சியின் போது, ​​தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) புதிய இலச்சினையை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

குறிப்பு

  • SDAT என்பது தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ விளையாட்டை மேம்படுத்தும்  அமைப்பாகும், இது மாநிலம் முழுவதும் விளையாட்டு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 12,000 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >