தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டத்திற்கான கணக்கெடுப்பு

  • புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் (NILP) 2022- 2027ன் கீழ் கல்வியறிவு இல்லாதவர்களைக் கண்டறிய பள்ளிக் கல்வித் துறை ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
  • தமிழ்நாடு முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
  • இந்த கணக்கெடுப்பின் மூலம் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 16,463 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

NILP திட்டம் பற்றி

  • குறிக்கோள் – அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் அறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல் திறன்களை வழங்குதல்
  • புதிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • பயனாளிகள் – அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எழுத்தறிவு இல்லாதவர்கள்

குறிப்பு

  • 1992 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மொத்த எழுத்தறிவு பிரச்சாரம் மற்றும் அடிப்படைக் கல்வியறிவுக்குப் பிந்தைய பிரச்சாரம் ஆகியவை புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம் (NILP) 2022- 2027 இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை அகழாய்வு

  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்தில் மூன்றாவது கட்ட தொல்லியல் அகழாய்வு சமீபத்தில் தொடங்கியது.
  • வைப்பாற்றின் வடக்கு கரையில் 1.5 ஏக்கரில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
  • முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மொத்தம் 7,914 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் கரையோரம் மக்கள் வாழ்ந்ததை இது உறுதிபடுத்துகிறது.

குறிப்பு

  • முதல் கட்ட அகழாய்வு மார்ச் 2022ல் மேற்கொள்ளப்பட்டது.

காலநிலை முதலீட்டு பயிலரங்கு

  • பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சமீபத்தில் உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்துடன் (IFC) இணைந்து இரண்டு நாள் காலநிலை முதலீட்டுப் பயிலரங்கை நடத்தியது.
  • இந்த பயிலரங்கு சென்னை நகரத்திற்கான ஒரு விரிவான சுற்றுச்சூழல் உத்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு செயல்படுத்தும் காலநிலை மாற்ற திட்டங்கள்

  • மீண்டும் மஞ்சப்பை இயக்கம்
  • காலநிலை ஸ்டுடியோ (அண்ணா பல்கலைக்கழக வளாகம்)
  • காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு மாநில செயல் திட்டம் 0 (TNSAPCC)
  • காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்
  • கோயம்பேடு சந்தையில் கார்பன் சமநிலை திட்டம்
  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்
  • பசுமை தமிழ்நாடு திட்டம்
  • தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்
  • தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம்
  • தட்பவெப்ப நிலையைத் தாங்கும் பசுமைக் கோயில்கள் திட்டம்
  • கார்பன் செறிவூட்டல் திட்டம்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >