தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

NGT அபராதம் விதிப்பு

  • மார்ச் 2023ல் நாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள பட்டினமாச்சேரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு இழப்பீடாக ₹5 கோடி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்துக்கு வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டது.
  • நாகப்பட்டினத்தில் உள்ள CPCL-ன் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலையில் கசிவு ஏற்பட்டது.
  • 10,000 லிட்டர் எண்ணெய் கசிந்துள்ளதாகவும் அதில் 9,000 லிட்டர் மட்டுமே அகற்றப்பட்டது என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) தெரிவித்துள்ளது.

NGT பற்றி

  • இது தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் 2010 இன் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • குறிக்கோள் – சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளை திறம்பட மற்றும் விரைவாக தீர்த்தல்.
  • தீர்ப்பாயத்தின் முதன்மை அமைவிடம் – புது தில்லி .

தமிழ்நாட்டின் அரிசி மகசூல்

  • 2023-24 ஆம் ஆண்டில் காரீஃப் மற்றும் ராபி ஆகிய இரு சாகுபடி பருவங்களுக்கும் தமிழகத்தின் நெல் விளைச்சல் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டுக்கான மகசூல் தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 31 டன்னாகவும், அகில இந்திய அளவில் சராசரியாக ஹெக்டேருக்கு 2.74 டன்னாகவும் உள்ளது.
  • விளைச்சலின் அடிப்படையில், அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்ற ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >