தமிழ்நாடு நிகழ்வுகள

தமிழ்நாடு நிகழ்வுகள்

  • சென்னை தரமணி, சேப்பாக்கம், மதுரை, கோவை, நாகை, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி, தேனி சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் ரூ.176.93 கோடியில் தோழி விடுதிகள் கட்டப்படவுள்ளன.

ஊட்டச்சத்து திட்டம்

  • கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.
  • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் 2022-இல் தொடங்கப்பட்டது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வளமான, நலமான எதிர்காலத்தை உருவாக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும் திட்டத்தைத் தொடங்குவதாக அந்தத்துறை அறிவித்தது.
  • ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் முதல் கட்டத்தில், தமிழகம் முழுவதும் 37 லட்சத்து 79 ஆயிரத்து 407 குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் கண்காணிக்கப்பட்டன.
  • ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >