வயது வந்தோருக்கு காசநோய் (TB) கண்டறியப்பட்ட நோயாளிகளிடையே மரண அபாயத்தை மதிப்பிடுவதற்கான முன்கணிப்பு மாதிரி.
காசநோய் (TB) நோயால் பாதிக்கப்பட்ட வயது வந்தோரிடையே மரண அபாயத்தை மதிப்பிடுவதற்கான முன்கணிப்பு மாதிரியைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
இந்த மாதிரி மாநிலத்தின் தற்போதைய TB SeWA செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது நோய் கண்டறிதலின் போது உடனடியாக நோயாளிகளை வகைபடுத்தலில் சுகாதார பணியாளர்களுக்கு உதவுகிறது.
இந்த முன்கணிப்பு மாதிரியானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய நோயியல் நிறுவனத்தால் (ICMR-NE) உருவாக்கப்பட்டது.
இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டின் TB SeWA (தீவிரமான TB இணைய செயலியில் ) இல் இணைக்கப்பட்டுள்ளது.
TB SeWA ஆனது 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காசநோய் ஒழிப்பு திட்டம் (TN-KET) கீழ் இயங்கி வருகிறது, இது கடுமையான TB நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்தும் வேறுபட்ட பராமரிப்பு மாதிரியாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 10-15% வயது வந்த TB நோயாளிகள் நோய் கண்டறிதலின் போது கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த நோயாளிகளுக்கு நோய் கண்டறிதலில் இருந்து மருத்துவமனையில் அனுமதி வரையிலான சராசரி நேரம் ஒரு நாள் ஆகும், ஆனால் சுமார் 25% நோயாளிகள் இன்னும் ஆறு நாட்கள் வரை தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், சென்னை ஐ ஐ டியுடன் இணைந்து, சென்னையில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தின் மாதிரி வடிவமைப்பை, தொழில் துறை அமைச்சர் வெளியிட்டார்
தையூரில் உள்ள சென்னை ஐ ஐ டியின் டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகத்தில் 65 ஆயிரம் சதுரடி பரப்பில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது.
குப்பைகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்க முடியும். விவசாய கழிவுப் பொருட்களும் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் அதன் முதற்கட்ட சோதனை நடத்த உள்ளோம்.
ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் போது மாசுப்படுதலும் குறைக்கப்படும் .
இதனால், 2070- ம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன் முயற்சிகளுக்கு ஊக்கமாக அமையும்.