நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்
செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்புக்கான (TNWRIMS) இணையதளத்தை உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த
இணையதளத்தை உருவாக்க, நீரை பயன்படுத்தும் பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன
நிகழ்நேர தகவலை அளிக்கும் இந்த அமைப்பில் நீர் வழங்கல், தேவை, தரம், பயனர்கள் போன்றவை, கிராம தண்ணீர் வரவு செலவு, வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம், நீர்வரத்து முன்னறிவிப்பு, நீர்த்தேக்க செயல்பாடு மேம்படுத்தல், நிலத்தடி நீர் தகவல், ஆற்றுப் படுகைகள் இடையே நீர் பரிமாற்றம், நீர் பாதுகாப்பு திட்டம் போன்ற 11 தொகுதிகள் உள்ளன. தமிழக நீர்வளத் துறை இணையதளத்தில் இந்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது
நடமாடும் பொதுவிநியோக கடைகள்
தமிழ்நாடு அரசு சென்னையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்மாதிரி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி பாரம்பரிய நியாயவிலைக் கடைகளுக்கு செல்வதில் சிரமம் அனுபவிக்கும் நபர்களுக்கு பொதுவிநியோக அமைப்பை (PDS) அணுகுவதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்மாதிரி திட்டம் கடலூர், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.