தமிழ்நாடு நிகழ்வுகள்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுதிறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தத்தின்படி, மாற்றுத் திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சி மன்றங்களுக்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ் நாடு அரசு கோரியுள்ளது.

12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர்.

UMIS 
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) தளத்தின் மூலம் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களால் 9.40 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தரவுகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது.

கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) போன்று, இந்த தளம் ஒரு ஒற்றைச் சாளர அமைப்பாக வடிவமைக்கப்பட்டு, செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் உயர்கல்வித் துறைக்கு தேவையான பகுப்பாய்வுகளை நடத்த உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

தமிழ் புதல்வன் திட்டம் பற்றி
தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 9, 2024 அன்று கோயம்புத்தூரில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கினார்.

இதன்கீழ், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆண் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது மாதம் 31,000 வழங்கப்படும்.

பெண் மாணவர்களுக்கான புதுமைப் பெண் திட்டத்தின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டது.

புதுமைப் பெண் திட்டம் பற்றி

தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னிலையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உத்தரவாத திட்டத்தை ‘புதுமைப் பெண்’ என்ற பெயரில் தொடங்கினார்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பெண் மாணவர்களுக்கு அவர்கள் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது ITI படிப்பை முடிக்கும் வரை மாதம் 31,000 உதவித்தொகை வழங்கப்படும்.

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >