மாநில அதிகாரங்கள் குறித்த தமிழ்நாடு குழு அமைப்பு
- மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்து, மாநிலங்களின் தன்னாட்சி மற்றும் கூட்டாட்சியை வலுப்படுத்த பரிந்துரைகள் வழங்க மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் இந்த உயர்மட்டக் குழுவை வழிநடத்துவார்.
- ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மாநில திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் எம். நாகநாதன் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- குழுவின் பரிந்துரைகள்:
- மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அம்சங்களை மீட்டெடுக்க வழிகள்
- மாநிலங்கள் நிர்வாக சவால்களை சமாளிக்க முறைகள்