இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றம்
நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள்
- பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
- தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
- தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
- தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
- தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
- அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
- தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில்
நீருக்குள் ஒலியியல் சோதனை
- சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், நீருக்குள் ஒலியியல் சோதனை வசதிக்காக உலகளாவிய அங்கீகாரம் மற்றும் சர்வதேச சான்றிதழ் பெற்றது
- தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனத்தில் நிறுவப்பட்ட இந்த அமைப்பை பாரிஸில் உள்ள சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் பணியகம் அங்கீகரித்துள்ளது.
- இது கடந்த ஆண்டு ஜன.30-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
- இது நாட்டிலேயே நீருக்குள் ஒலியியல் அளவீடுகளுக்கான தேசிய தரநிலைகளைக் கொண்டுள்ள நிறுவனமாகும்.