தமிழ்நாடு நிகழ்வுகள்

நோய்களை கண்காணிக்க தமிழ்நாட்டில் உள்ள 2 சரணாலயங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக உள்ளன

  • அதிகரித்த பறவை-மனித தொடர்பு அமைப்புகளில் விலங்குகளிலிருந்து பரவும் நோய்களைக் கண்காணிப்பதற்கான மாதிரியை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமையிலான இவ்வகை  ஆய்வில் மூன்று மாநிலங்களில் ஒறு மாநிலமாக  தமிழ்நாடு பங்கேற்கிறது.
  • அமைச்சகங்களுக்கு இடையிலான இந்த முதல் வகையான ஆய்வு, சிக்கிம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சரணாலயங்களில் மற்றும் ஈரநிலங்களில் ஒரே ஆரோக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்தி மனித மக்கள் தொகையின் ஆரோக்கியம் மற்றும் புலம்பெயர் பறவை இனங்களைக் கண்காணிக்க மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஆய்வு தமிழ்நாட்டில், நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை  பறவைகள்  சரணாலயம் மற்றும் திருவாரூரில் உள்ள வடுவூர் பறவைச் சரணாலயத்தில் நடத்தப்படும்.
  • இந்தத் திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் வேளாண்மை அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உள்ளடக்கிய, விலங்குகளிலிருந்து பரவும் நோய்களுக்கான முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்கும்.

 

புதிய பம்பன்  பாலம்

  • பிரதமர் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கும் கடல் பாலத்தை ₹531 கோடி செலவில் பாக் நீரிணையில் திறந்து வைத்தார்.
  • இராமநாதபுரத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கிறது.
  • பிரிட்டிஷ் காலத்து நூற்றாண்டுக்கும் மேலான கேண்டிலெவர் பாலத்தை (1914இல் அறிமுகப்படுத்தப்பட்டது) மாற்றாக கட்டப்பட்டது .

தொழில்நுட்பம் & வடிவமைப்பு:

  • புதிய பாலம் ஒரு செங்குத்து தூக்கும் பரப்பைக் (5 மீட்டர்) கொண்டுள்ளது – இந்திய ரயில்வேயில் முதல் வகையான பாலமாகும் .
  • ஸ்பானிய நிறுவனம் TYPSA வடிவமைத்தது; IIT-மெட்ராஸ் சரிபார்த்தது, கூடுதல் நிலைத்தன்மைக்காக IIT-பாம்பே வடிவத்தில் சிறு  மாற்றங்கள் செய்தது .

மேக் இன் இந்தியா சிறப்பம்சங்கள்:

  • 97-98% பொருட்கள் உள்நாட்டில் பெறப்பட்டன.

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >