தமிழ்நாடு நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி

  • 2024-25 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 69% ஆக உள்ளது. இது கடந்த 10 கடந்த பத்து வருடத்தில் அதிகபட்ச வளர்ச்சியாகும்.
  • வளர்ச்சியானது 2017-18 ஆம் ஆண்டில் 59% ஆக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று ஆண்டான 2020-21 இல் குறைந்தபட்சமாக (0.07%) பதிவாகியுள்ளது.
  • உண்மையான வளர்ச்சி விகிதம் என்ற சொல், பணவீக்கத்தை தவிர்த்த விகிதத்தைக் குறிக்கிறது.
  • பணவீக்கத்தை உள்ளடக்கியது பெயரளவு பொருளாதார வளர்ச்சி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டின் 2024-25க்கான பெயரளவு வளர்ச்சி விகிதம் 02%, இது மாநிலங்களிலேயே அதிகபட்சமாகும்.
  • மாநிலத்தின் செயல்திறன் மூன்றாம் நிலை (சேவை) துறையில் 7% வளர்ச்சியாலும், இரண்டாம் நிலையில் 9% வளர்ச்சியாலும் இயக்கப்படுகிறது.
  • முதன்மை துறையின் செயல்திறன் மோசமாக 15% ஆக உள்ளது.
  • மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலில் மூன்றாம் நிலை துறையின் பங்களிப்பு சுமார் 53%, அதைத் தொடர்ந்து இரண்டாம் நிலை 37% மற்றும் முதன்மை துறை 10% உள்ளது.

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகள்

  • தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகு கன் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன.
  • முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம் உள்பட 33 இடங்கள் என 3 மாநிலங்களை யும் சேர்த்து மொத்தம் 106 இடங்களில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழகத்தில் கண்டறியப்பட்ட இதன் தரவுகளை ஆய்வு செய்ததில் 3 மாநிலங் 390 பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளன.
  • இதில், தமிழகத்தில் மட்டும் 157 பிணந்தின்னிக் கழுகுகள் கண்டறியப்பட்டன. அதில் அதிகபடச்சமாக 110 வெண்முதுகு வகை பிணந்தின்னிக் கழுகுகள், நீண்ட மூக்கு பிணந்தின்னிக் கழுகுகள் – 31, செம்முக பிணந்தின்னிக் கழுகுகள் – 11 மற்றும் எகிப்தியன் பிணந்தின்னிக் கழுகுகள் -5 கண்டறியப்பட்டுள்னன

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >