போதை மறுவாழ்வு மையங்களுக்கு கட்டுப்பாடு
- போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ் நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்குத் தகுதி பெறுவார். அதன்படி, மறுவாழ்வு மையங்களில் அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம்.
- ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள் என்றும், மறுவாழ்வு மையங்கள் என்றும் அதனை வகைப்படுத்தலாம்.
- மறுவாழ்வு மையங்களில் உளவி யல் சார்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும்.
- ஒருங்கிணைந்த மையங்களில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியில் இருத்தல் அவசியம். ஒரு உளவியல் ஆலோசகரும் அங்கு பணியமர்த்தப்பட வேண்டும்.
- மறுவாழ்வு மையங்களில் வாரம் ஒரு முறையாவது மனநல மருத்துவர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
- அதேபோல, ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும், செவிலியரும் நாள்தோறும் பணியில் இருப்பது முக்கியம். சிசிடிவி கேமராக்கள் மறு வாழ்வு மையங்களில் இருப்பது கட்டாயம்.
- முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக்கூடாது. மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடைய நேரிடும் போது அவர்களது உறவினர்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம். அது குறித்த தகவலை மன நல சிகிச்சை வாரியத்துக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.