தமிழ்நாடு நிகழ்வுகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – தொல்லியல் & அருங்காட்சியகங்கள்

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வுகள் (2025-26)

  • கீழடி (சிவகங்கை), பட்டணமாறுதூர் (தூத்துக்குடி), கரிவலம்வந்தநல்லூர் (தென்காசி), நாகப்பட்டினம், மாணிக்கொல்லை (கடலூர்), அடிச்சனூர் (கள்ளக்குறிச்சி), வெள்ளலூர் (கோயம்புத்தூர்), மற்றும் தெலுங்கனூர் (சேலம்) ஆகிய இடங்களில் புதிய அகழாய்வுகள்.
  • பண்டைய தமிழர்களின் கலாச்சார அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளது: பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திர பிரதேசம்), மாஸ்கி (கர்நாடகா).
  • மேம்பட்ட அறிவியல் பகுப்பாய்வுகள்: பண்டைய DNA, உலோகவியல், மகரந்த பகுப்பாய்வு, OSL காலக்கணிப்பு.
  • பட்ஜெட்: தொல்லியல் ஆராய்ச்சிக்கு ₹7 கோடி.

ஆழ்கடல் தொல்லியல் அகழாய்வுகள்:

  • தென்கிழக்கு ஆசியா, மத்தியதரைக்கடல், அரேபிய தீபகற்பம் மற்றும் ரோமானிய பேரரசுடன் தமிழ் கடல்சார் வர்த்தகம் குறித்த கவனம்.
  • முதல் கட்டம்: காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு.

புதிய அருங்காட்சியகங்கள் & கலாச்சார காட்சியகங்கள்:

  • நொய்யல் அருங்காட்சியகம் (ஈரோடு, ₹22 கோடி): கொடுமணல் அகழாய்வுகளை சிறப்பிக்கிறது.
  • நாவாய் அருங்காட்சியகம் (ராமநாதபுரம், ₹21 கோடி): பாண்டிய கடல்சார் வர்த்தகத்தை (சங்க காலம்) மையமாகக் கொண்டது.
  • சிந்து சமவெளி கலாச்சார காட்சியகம் (எக்மோர் அருங்காட்சியகம், சென்னை): சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதன் 100 ஆண்டுகளைக் குறிக்க.
  • மாமல்லபுரம் & திருவண்ணாமலையில் தமிழ் கலாச்சார அருங்காட்சியகங்கள்: உலகளாவிய சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்துதல்.

எக்மோர் அருங்காட்சியக மேம்பாடுகள்:

  • ஐம்பொன் (ஐந்து உலோக கலவை) மூலம் செய்யப்பட்ட 2,000+ வெண்கல சிலைகளைக் கொண்டுள்ளது.
  • சிற்ப கலைப்படைப்புகளுக்கான புதிய பாரம்பரிய கட்டிடக்கலை காட்சியகம்.
  • பட்ஜெட்: ₹40 கோடி.

 

மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையங்கள்

  • மூத்த குடிமக்களின் நலனை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு 25 அன்புச்சோலை மையங்களை (மூத்தோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள்) நிறுவும்
  • மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ₹10 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இது நிறுவப்படும்
  • ஒவ்வொரு மையமும் தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடன் பகல்நேர உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பு, மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும்

தனுஷ்கோடி  பூநாரை  சரணாலயமாக அறிவிக்கப்படவுள்ளது

  • இடம்: ராமேஸ்வரம் தீவின் நுனியில் உள்ள தனுஷ்கோடி.
  • முக்கியத்துவம்: மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் புலம்பெயர் பறவைகளுக்கு, குறிப்பாக பூநாரைக்கு  (குஜராத் மாநில பறவை) முக்கியமான புகலிடமாகும் .
  • நோக்கம்: ஈரநில பறவைகள் மற்றும் பல்வகை சுற்றுச்சூழல் அமைப்புகள் (மணல் குன்றுகள், சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக் காடுகள்) பாதுகாப்பு.

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >