தமிழ்நாடு நிகழ்வுகள்

நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு

  • கூர்நோக்கு  இல்லங்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கான ஒரு நபர் குழுவின் தலைவராக கே. சந்துரு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015ன் படி செயல்படும் இல்லங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 பற்றி:

  • 2000 ஆம் ஆண்டின் சட்டத்திற்குப் பதிலாக – சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இயற்றப்பட்டது.

நோக்கம்: 

  • சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள் மற்றும் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை பராமரித்தல்.
  • இது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறார் நீதி வாரியங்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களை அமைக்க ஆணையிடுகிறது.

சிறந்த திருநங்கை விருது

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை வேலூரைச் சேர்ந்த பி ஐஸ்வர்யாவிற்கு வழங்கினார்.
  • கடந்த இருபது ஆண்டுகளாக சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது .
  • தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படுகிறது
  • விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கார்பன் சமநிலை மையங்கள்

  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தையும், புனித யாத்திரை நகரமான ராமேஸ்வரத்தையும் கார்பன் சமநிலை  மையங்களாக “மாற்ற தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

‘பயோ சிஎன்ஜி ஆலைகள்’

  • கார்பன் சமநிலையை அடைய, ஈரமான கழிவுகளை பதப்படுத்துவதற்கு ‘பயோ சிஎன்ஜி ஆலைகளை நிறுவுதல், நில பயன்பாட்டு திட்டமிடல், அகற்றுதல் மூலம் குறைந்த உமிழ்வு வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்
  • பயோ மைனிங் மூலம் திரட்டப்பட்ட கழிவுகள், மற்றும் குறைந்த உமிழ்வு போக்குவரத்து அமைப்புகளை அதிகரித்தல்.

கார்பன் மடுவை அதிகரித்தல்

  • காடு வளர்ப்பு மூலம் கார்பன் மடுவை அதிகரிப்பது மற்றும் கடலில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக்கைக் குறைக்க பொருள் மீட்பு வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை

  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்னோடித் திட்டமாக, ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகங்களில் ஒன்றான சென்னையின் கோயம்பேடு சந்தையை 25 கோடி செலவில் கார்பன் சமநிலையாக மாற்றும் பணியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தும்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >