தமிழ்நாடு நிகழ்வுகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

  • சென்னை –கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறார்
  • ரூ.5200 கோடிக்கு மேலான மதிப்பில் விமான நிலையம், இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களைத் துவக்குதல், கொடியசைத்து தொடங்குதல் மற்றும் அடிக்கல் நாட்டுதல்.

துவக்குதல்

  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (கட்டம்-I).
  • தேசிய நெடுஞ்சாலை-785-ல் மதுரை – செட்டிக்குளம் வரை மேல்நிலைப் பாதை நான்கு வழிச்சாலை.
  • தேசிய நெடுஞ்சாலை-785-ல் நத்தம் – தோவரங்குறிச்சி வரை மேல்நிலைப்பாதை நான்கு வழிச்சாலை.

அடிக்கல் நாட்டுதல்

  • தேசிய நெடுஞ்சாலை-744-ல் திருமங்கலம்-வடுகப்பட்டி பிரிவுக்கு நான்கு வழிச் சாலை அமைத்தல்.
  •  தேசிய நெடுஞ்சாலை-744-ல் வடுகபட்டி – தெற்கு வெங்கநல்லூர் பிரிவுக்கு நான்கு வழிச் சாலை அமைத்தல்.

நீலகிரி மாவட்டம் காசநோய் இல்லாதநிலையை எட்டியதற்காக தமிழகத்துக்கு பதக்கம் வழங்கப்பட்டது.                                                          

  • காசநோய் இல்லா நிலையை எட்டுவதற்கான திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு தங்கப்பதக்கமும், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ளிப்பதக்கமும்,கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும் மாநாட்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நவீன டெலிகோபால்ட் கருவி

  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.
  • வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சையை விட இது புற்றுநோய் செல்களை மிகவும் துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
  • ‘ட்ரூ பீம் ரேடியேஷன்’ முறை மற்றும் ‘டெலி கோபால்ட்’ முறை ஆகியவை கதிர்வீச்சு சிகிச்சைக்காக நிறுவப்பட்ட அதிநவீன கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >