தமிழ்நாடு நிகழ்வுகள்

அகழாய்வுகள்

  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையின் ஒன்பதாம் கட்ட அகழாய்வு, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே துலுக்கர்பட்டி தொல்லியல் தளத்தில் 2ம் கட்ட அகழாய்வு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிளிநமண்டி கிராமத்தில் முதற்கட்ட அகழாய்வு ஆகியவற்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மாநில தொல்லியல் துறை இந்த ஆண்டு எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளும் மேலும்  முதன்முறையாக,மாநில தொல்லியல் துறை ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆண்டு அகழ்வாராய்ச்சி நடைபெறும் எட்டு இடங்கள்:

  1.  கீழடி (சிவகங்கை மாவட்டம்),
  2. கங்கைகொண்டசோழபுரம் (அரியலூர் மாவட்டம்),
  3. வெம்பக்கோட்டை (விருதுநகர்),
  4. துலுக்கர்பட்டி (திருநெல்வேலி),
  5. கீழ்நமண்டி (திருவண்ணாமலை),
  6.  பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை),
  7. பூதிநத்தம் (தர்மபுரி)
  8.  பட்டறைப்பெரும்புதூர்(திருவள்ளூர் )

கீழடி மெய்யாக்கச்  செயலி

  • கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட 200 கலைப்பொருட்களை உலகெங்கிலும் உள்ளவர்கள் ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் 3டி முறையில் பார்க்கக்கூடிய  வகையில் கீழடி மெய்யாக்கச்  செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.

திருச்சியில் டைடல் பூங்கா

  • திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா  அமைக்கப்படும்.
  • காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 250 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்கா  டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் .
  • சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள TICEL Biopark Limited இல் 10 கோடி ரூபாய் செலவில் TICEL புத்தாக்க  மையம் உருவாக்கப்படும்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >