தமிழ்நாடு நிகழ்வுகள்

திறனறிவுத்  தேர்வு திட்டம்:

  • அரசு பள்ளி மாணவர்களுக்கான திறனறிவுத்  தேர்வு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
  • திறனறிவுத் தேர்வு திட்டத்தில்,   முதன்மையான கல்வி  நிறுவனங்களின்  வழிகாட்டுதலைப் பெறுவதற்கு 1,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில்  இருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாத உதவித்தொகை 1,000 வழங்கப்படும்.
  • “இத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களை உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதாகும், இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் போது ஆண்டு உதவித்தொகையாக 12,000 கிடைக்கும்.

அனைவருக்கும் ஐஐடி-எம்:

  • பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அனைவருக்கும் ஐஐடி-எம் என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார் அனைவருக்கும் ஐஐடிஎம் முயற்சியானது நான் முதல்வன் திட்டத்தின் முன்னோடியாகும்.
  • இத்திட்டத்தின் நோக்கம்  இளம் கிராமப்புற மாணவர்களிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும்.
  • இம்முயற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி பெறும் 252 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். எலக்ட்ரானிக்ஸ்  துறையானது இப்போது பல தொழில்களுக்கு அடித்தளமாக உள்ளது, மேலும் இந்த முயற்சியானது மாநிலத்தை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு உதவும் .

இந்திய நீதி அறிக்கை 2022 கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதலிடம்

  • பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • 10 புள்ளிகளுக்கு தமிழகம் 6.4 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.  அதைத் தொடர்ந்து கர்நாடகா 6.01, தெலுங்கானா 5.35 புள்ளிகள் எடுத்தன.

அளவுருக்கள்  

  • உள்கட்டமைப்பு 
  • கைதிகளின் எண்ணிக்கை 
  • திருத்தும் முயற்சிகள் 
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >