தமிழக நிகழ்வுகள்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை

  • முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவாக சென்னையில் அவரது முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.                            உத்தரபிரதேச மாநிலம், அலகாபாதில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் வி.பி.சிங் இளம் வயதிலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து, தனது நிலங்களை தானமாக அளித்தார்.
  • 1969-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அந்த மாநில முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
  • தேசிய முன்னணியை உருவாக்கி, 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார். 11 மாதங்களே பொறுப்பில் இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.   

மண்டல் ஆணையம்:

  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தலாம் என்ற உத்தரவை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்பட்டது அவரது ஆட்சியில்தான்.
  • வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை அச்சிட வேண்டும் என்ற கட்டாயம், மாநிலங்களுக்கிடையே கவுன்சில் என பல்வேறு சாதனைகளைச் செய் வர் வி.பி.சிங்.
  • தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி. சிங் நினைத்தார்.
  • ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம் எனவும், அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் சுயமரியாதை என்றும் சொன்னவர் வி.பி.சிங்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >