பெட்ரோலில் எத்தனால் கலப்பு.
பெட்ரோலில் எத்தனால் கலப்பால் சர்க்கரை ஆலைகள் பெரும் பலன் அடைந்துள்ளதாக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சர்க்கரை உற்பத்தி 10 லட்சம் மெட்ரிக்டன் அதிகரித்துள்ளது என்றும்.எத்தனால் உற்பத்தித் திறன் 5 மடங்கும் அதன் விநியோகம் 10 மடங்கும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துதார்.
சர்க்கரைக்கான ஜிஎஸ்டி 28 சதவிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்
அறிவித்துள்ளார்.
எத்தனால்
எத்தனால் (C2H;OH) என்பது புதுப்பிக்கத்தக்க, எளிதில் எரியும், நிறமற்ற உயிரி ஆல்கஹால் ஆகும்.
இது போக்குவரத்து எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா 2025 ஆம் ஆண்டில் 20% எத்தனால் கலவை இலக்கை அடைந்துள்ளது.
எத்தனால் வகைகள்
1-ஆம் எத்தனால் : சர்க்கரைக் கம்பு, சோளம் போன்ற உணவு பயிர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
2-ஆம் எத்தனால்: பயிர் எச்சங்கள், பாகாஸ் (bagasse), மூங்கில் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
3-ஆம் எத்தனால்:ஆல்கே (algae) என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்தியா-மூன்றாவது இடம் – மின் கழிவுகள்
2025 ஆம் ஆண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் மின் கழிவுகளை* e-waste) உற்பத்தி செய்துள்ளது.
உலகில் மூன்றாவது பெரிய மின் கழிவு உற்பத்தியாளராக திகழ்கிறது.
இதில் பெரும்பாலானவை பாரம்பரிய முறையில் மறுசுழற்சி செய்யப்படுவதால், விஷமிகுந்த பொருட்கள் காற்றிலும் நீரிலும் வெளியேறி மின் கழிவு தொழிலாளர்களுக்கும், சமூகத்திற்கும் உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மின்கழிவு (மேலாண்மை) விதிகள், 2022
சரியான மறுசுழற்சி (recycling) மீது கவனம் செலுத்துகிறது.
ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் விதிகள், 2016
ஆபத்தான கழிவுகளின் பாதுகாப்பான கையாளல் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான வழிமுறைகளை இவ்விதி குறிப்பிடுகிறது.

